actress vidhya balan met accident
பாலிவுட் திரையுலகில் நடிகை வித்தியா பாலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட்டில் எப்படி நயன்தாரா மிகச் சிறப்பான வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறாரோ அதே போல் பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்தெடுத்து நடித்து வருகிறார் வித்யா பாலன்.
இந்நிலையில் வித்யா பாலன் முக்கியமான ஒரு சந்திப்பிற்காக மும்பையில் தன்னுடைய காரில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து, வித்யா பாலன் வந்த கார் மீது மோதியது.
இதில் அதிர்ஷ்ட வசமாக நடிகை வித்யா பாலனுக்கு பெரிய அளவில் அடிபடாமல், ஒரு சில காயங்களுடன் தப்பித்தார். இந்தத் தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள், வித்தியா பாலனுக்கு என்ன ஆனது என்று பதறிப் போய் விட்டனர். பின்னர் வித்யா பாலனுக்கு எதுவும் ஆகவில்லை என தெரியவந்ததும் ரசிகர்கள் அமைதி அடைந்தனர்.
