கடந்த 2006 ஆம் ஆண்டு, 'மதராசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா. ' முனி',' காளை', 'காஞ்சனா', பரதேசி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.  இவரால் கோலிவுட் திரையுலகில், முன்னணி இடத்தை பிடிக்க முடியாததால், கன்னடம், தெலுங்கு, திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.மற்ற மொழிகளில் இவர் நடித்த படடங்கள் தொடந்து வெற்றி பெற்றதால், முன்னணி நடிகையாக மாறினார். 

 

இதையும் படிங்க:  படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

கடைசியாக தமிழில் இவர் கடந்த ஆண்டு ராகவா லாரன்சுடன் நடித்த 'காஞ்சனா 3 ' திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது 'விநோதன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த வருடத்தின் கடைசியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா படப்பிடிப்புகளையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் பலரும் சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களையும், போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க:  “சத்தியமா விடவே கூடாது”.... சாத்தான்குளம் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்...!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதிகா குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோவே ரசிகர்கள் கண்ணை விட்டு நீங்காத நிலையில், அதேபோல் மற்றொரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளார். பிரபலமான ஆங்கில பாடல் ஒன்றிற்கு வீட்டின் மொட்டை மாடியில் குட்டை டவுசரை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் வேதிகா. உடலை வில்லாக வளைத்து நெளித்து வேதிகா போட்டுள்ள கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். ஒல்லியான உடல்வாகிற்கு ஏற்றபடி செம்ம ஆட்டம் போட்டுள்ள வேதிகாவின் வீடியோ இதோ....