நடிகை வேதிகா... முனி படத்தில் தான் அறிமுகமான போது 16 வயது தான் ஆனதாக கூறியுள்ளார். அந்த இளம் வயதிலேயே, திருமணம் ஆன பெண்ணாக, முதிர்ச்சியான கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவு வேண்டும் இவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவில் பிறந்த நடிகை வேதிகா,  தமிழில் 'மதராசி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, 'முனி' ,  'காளை', 'சக்கரகட்டி', 'மலை மலை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தொடந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.

இந்நிலையில் இவர் 13 வருடங்கள் கழித்து, காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசும் போது, "முனி படம் நடித்தபோது, தனக்கு 16 வயது தான் ஆனதாகவும். அப்போது விவரம் எதுவும் தெரியாது ஆனாலும் ஆர்வத்துடன் நடித்தேன்" என கூறியுள்ளார். 

மிக சிறிய வயதில், கதாப்பாத்திரத்தை உள்வாங்கி, திருமணம் ஆன பெண்ணகவும் வேதிகா நடித்ததற்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.