actress varalakshmi near sit in beer bottle

நடிகை வரலட்சுமி கதாநாயகியாக நடிப்பதைவிட கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த விக்ரம் வேதா, சத்யா ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தன. 

இந்நிலையில் தற்போது இவர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் 'சக்தி', மற்றும் 'காதல் மன்னன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

விமலுக்கு ஜோடியாக 'காதல் மன்னன்' படத்தில் நடித்து வரும் வரலட்சுமியின் இந்தப் படத்தை சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் காமெடி, காதல் கலந்த படமாக எடுக்கப்பட உள்ளது.

இதில் வரலட்சுமி போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். இவருக்கு தந்தையாக சந்திரமௌலி நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஒரு புகைப்படம் வெளியானது. இதில் விமல் மற்றும் வரலட்சுமி இருவரும் மணக்கோலத்தில் பீர் பாட்டில் முன் அமர்திருப்பது போல் உள்ளது.

இதைக் குடிக்கலாமா? வேண்டாமா? டாஸ்மாக், முடிவெடுக்கும் நேரமிது. என்று விமல் மற்றும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Scroll to load tweet…