யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவரான திரிஷா குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் நடக்கும் வன்முறைகளுக்கு பெரும் குரல் கொடுத்து வருகிறார்.

இது தொடர்பாக சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார் த்ரிஷா. நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரிஷா ஒரு சில கருத்துகளை பதிவு செய்தார்.

அப்போது, "அஜித் என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது என்னுடைய ரசிகர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமே நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் இதுவரை நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்கவில்லை... அவரை போன்ற மிகச்சிறந்த மனிதர் இதுபோன்ற படத்தில் நடித்ததற்கு கண்டிப்பாக பெரிய பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும். இந்த படம் மூலம் பல செய்திகள் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இருக்கேன். கண்டிப்பாக படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வு கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் அரசியல் பற்றி நாம் இங்கு பேச வேண்டாம். அதேவேளையில் ஓட்டு போடுவது என்பது மிக முக்கியமான ஒன்று. அது நம் கடமையும் கூட உரிமையும் கூட... உங்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவருக்கு ஓட்டு போடலாம். இந்தியாவை பொருத்தவரையில் பாலியல் வன்முறைகளுக்கான சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். அரபு நாடுகளில் இது போன்ற தவறுகளுக்கு உடனடி தண்டனை தருவது போல் நம் நாட்டிலும் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது" என தெரிவித்திருந்தார்.