'டேஞ்சர்' என்கிற தெலுங்கு படத்தில் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய, சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். 

'டேஞ்சர்' என்கிற தெலுங்கு படத்தில் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய, சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் படத்திலேயே... துரு துரு பார்வையால் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் சுவாதி. இந்த படத்தை தொடர்ந்து, போராளி, இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை,ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த போதிலும், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால், 2018 ஆம் ஆண்டு, விமானி விகாஷ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் சமீப காலமாக மீண்டும் மலையாளம் மாற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் சுவாதி.

இந்நிலையில், சுவாதி ரெட்டி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, திருமண புகைப்படங்களை திடீர் என நீக்கினார். இதனால் நடிகை சுவாதிக்கும், அவருடைய கணவர் விகாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் ஒரு தகவல் பற்றி எரிந்தது.

இந்நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹார்ரி பாட்டர் மற்றும் டாபி கதாபாத்திரங்கள் பேசுவது போல் பதில் கொடுத்துள்ளார். அதாவது எதை எங்கு வைக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும், பர்சனல் விஷயங்களை சேமிக்க தனியாக ஒரு போல்டர் போட்டு அதில் திருமண புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளாராம். இந்த வீடியோ மூலம்... விவாகரத்து வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் சுவாதி. 

View post on Instagram