உலக அழகியும், பிரபல நடிகையுமான சுஷ்மிதா சென் முதல் முறையாக தான் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டபோது, அணிந்திருந்த உடையின் பின்னணியில் உள்ள வறுமை குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென்:

ஹைதராபாத்தில், ஒரு சாதாரண நடு தர குடும்பத்தில் பிறந்து, உலக அழகியாவதற்கு வசதி முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நிரூபித்தவர் நடிகை சுஷ்மிதா சென்.

அழகியாக தேர்வு:

சுஷ்மிதா சென், கடந்த 1994 ஆம் ஆண்டு தன்னுடைய 18 ஆவது வயதில், பெமினா மிஸ் இந்திய அழகி போட்டியில் கலந்து கொண்டார். இதில் அவர் வெற்றி பெற்றது, இவரை அடுத்ததாக உலக அளவில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்க வழிவகுத்தது. 

அதே ஆண்டில், உலக அழகி என்கிற பட்டத்தையும் சுஷ்மிதா சென் வென்று, இந்தியாவில் முதல்  முறையாக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பெண் என்கிற பெருமையையும் பெற்றார்.

நடிகையாக அவதாரம்:

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பின், திரைப்பட வாய்ப்புகளும் இவரை வட்டமிட துவங்கியது. அந்த வகையில், இந்தியில், 'டஸ்டாக்' என்கிற படத்தில் அறிமுகமானார். தமிழில் இவர் நடிகர் நாகர்ஜுனா நடித்த 'ரட்சகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்த சுஷ்மிதாசென், தமிழில் அவருக்கு பிடித்தது போல் கதை அமையாததால், தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை. எனினும் பாலிவுட் திரையுலகத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து  அசத்தினார்.

திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை:

காதல் தோல்வியின் காரணமாக, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை மட்டும் தத்து எடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென், கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்காலி மொழி படத்தில் நடித்தார். 

உலக அழகிக்கு பின் உள்ள வறுமை:

இந்நிலையில் தான் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட போது, எப்படி பட்ட வறுமையில் இருந்து தன்னம்பிக்கையின் மூலம் சாதித்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சுஷ்மிதா.

இது குறித்து அவர் கூறுகையில்... உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் டிசைனர் வைத்து, உடைகளை தைத்தனர். ஆனால் நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், அப்போது கையில் அதிக பணம் இல்லாததால்... டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் எனக்கு தேவையான 4  உடைகளை வாங்கி அங்கிருந்த ஒரு டைலரிடம் கொடுத்து அதனை தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டேன்.

ஆனால் கடைசி வரை தன்னுடைய அம்மா நீ என்ன உடை அணிந்து வருகிறார் என்பதை யாரும் கவனிக்க மாட்டரகள். உன்னை தான் பார்ப்பார்கள் என தைரியம் கொடுத்ததாக இந்த பிரத்தியேக பேட்டியில் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

பல வருடத்திற்க்கு பின் இவர் வெளியிட்டுள்ள இந்த உண்மை இவருடைய ரசிகர்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.