நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் “மாசிலாமணி” படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். வம்சம், நீர் பறவை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார். 

என்ன தான் திறமையான ஹீரோயினாக இருந்தாலும், ஓவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான தெறி படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டினார். கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும்  கிடைத்தது.

தற்போது நடிகர் கிருஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணக்க உள்ளதாக வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை இருவருமே சட்டை செய்ததாக தெரியவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது குடும்பத்துடன் பொழுது போக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!

அப்படி வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்களில் பலர் தங்களது மலரும் நினைவுகளை தோண்டி எடுத்து இளமை கால புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி பிக்பாஸ் ஷெரின் துள்ளுவதோ இளமை ஷூட்டிங்கின் போது தனுஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட அது தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: உடைமாற்ற இடமில்லாமல் தவித்த தமன்னா... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கிடைத்த பகீர் அனுபவம்...!

தற்போது சுனைனா தான் 14 வயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இப்ப செம்ம ஒல்லியாக இருந்தாலும் அப்ப சுனைனா நல்ல கொழு, கொழு லுக்கில் தான் இருக்கிறார். அந்த போட்டோ தற்போது ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது. அந்த புகைப்படம் இதோ...

View this post on Instagram

14 😄 the EXTREMELY awkward phase

A post shared by Sunainaa (@thesunainaa) on Apr 9, 2020 at 9:40am PDT