நடிகை சுனைனா ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிடவே, ரசிகர்கள் பலர் இவர்தான் உங்கள் காதலரை என சுனைனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2005ம் ஆண்டு குமார் VS குமாரி என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா.  தமிழில் 2008ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

 

முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில், 'தெறி', 'காளி' போன்ற படங்கள் வெளியாகியது.

மேலும் தற்போது  'நிலா நிலா ஓடி வா' என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். அதேபோல் 'சில்லுக்கருப்பட்டி', 'எரியும் கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சில வருடங்களாக சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால், இவர் திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் ஒரு சில செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சுனைனா ஒருவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளது படுவேகமாக வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் சுனைனா பதில் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.

View this post on Instagram

From the archives

A post shared by Sunainaa (@thesunainaa) on Mar 14, 2019 at 11:37am PDT