பிக் பாஸ் வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக வாழ்ந்து வரும் சுஜா வருணியின் அனுபவங்களை பற்றி அறிந்துக்கொள்ள, அவரை பிக் பாஸ் அறைக்கு வரவைத்து அவருடைய அனுபவம் பற்றி கேட்கப்பட்டது.

சுஜா தன்னை பற்றியும் இந்த வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக வாழ்ந்து வருவது பற்றியும் கூறினார். முதலில் தன்னுடைய வீட்டில் நான், என் தங்கை, மற்றும் அம்மா தான் வசித்து வருகிறோம். அம்மா  உடல்நலம் சரியில்லாதவர். தங்கை ஆபீஸ் சென்று விடுவார், தனக்கு பெரும்பாலும் ஷூட்டிங் இருக்காது அதனால் நான் வீட்டில் தான் இருப்பேன் என்று பேச ஆரம்பித்தார்.

மேலும் வீட்டில் நான் எப்போதும் தனிமையாகத்தான் இருப்பேன் ஆனால் இப்போது தன்னை சுற்றி நிறைய நபர்கள் இருப்பது  தனக்கு புதிதாக உள்ளது என்றும், இங்கு உள்ளவர்களையும் நான் என்குடும்பமாக தான் பார்க்கிறேன் என்று கூறினார். 

இதுவரை ஒருவர் கூட தன்னை பற்றி பேசியது இல்லை ஆனால் பின்னால் சென்று பேசுகிறார்களா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது திடீரென தன்னுடைய  சினிமா பயணத்தை பற்றி சொல்ல துவங்கினர். குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதில் திரைத்துறைக்கு வரும்படி நடந்து விட்டது. அதை ஏற்றுக்கொண்டு பல தவறுகள், நன்மைகள், கஷ்டங்களை  தாண்டி வந்து விட்டேன்.

பட வாய்ப்புகள் இல்லாத போது தான், வர்ணஜாலம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்களுக்கு ஆடும் வாய்ப்பையும் பெற்றேன். ஒரு நிலையில் தான் தெரிந்தது இப்படி ஆடுபவர்களை ஐட்டம் டான்சர் என்பார்கள் என்று.  தன்னையும்  அப்படி தான் கூறினார்கள்.

இப்படி யாரையும் கூற கூடாது, அது தப்பு பிக் பாஸ் என அங்கேயே அழ ஆரபித்து விட்டார். பின் இப்படி டான்ஸ் ஆடுபவர்களுக்கும் சுயமரியாதை என்பது உள்ளது. ஆடுவது அவர்களது தொழில் இதனை தவறாக பேச கூடாது. உங்க வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ஐட்டம் வந்து இருக்கு என்று யாரும் சொல்ல மாட்டார்கள் விருந்தாளி  வந்திருகின்றனர் என்று தானே சொல்லுவோம் என கேள்வியை எழுப்பினர்.

மேலும் சாப்பிடும் பொருளை தான் ஐட்டம்ஸ் என்று சொல்லுவோம். அதனால் இப்படி சொல்லுவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து தனக்கு மிக பெரிய பிரபலங்களுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தும் இப்படி தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதிலேயே தான் இனி ஆடக்கூடாது என்று முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இனி யாரையும் ஐட்டம் என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் என கண்ணீரோடு சுஜா கூறினார்.