நடிகை ஸ்ரீரெட்டி அடுத்தடுத்து தமிழ் பட நடிகர்கள், மற்றும் முன்னணி இயக்குனர்கள், பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக ஒரு சில ரசிகர்கள் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்து வருவதால்.

தொடர்ந்து தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக ஏமாற்றிய இயக்குனர்கள் பெயரை துணிந்து வெளியிடுகிறார் ஸ்ரீரெட்டி.

மேலும் ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் லைவ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீரெட்டி, ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு, எந்த தயக்கமும் இன்றி மிகவும் பொறுமையாக பதில் அளித்தார்.

அப்போது ஸ்ரீரெட்டியிடம் ரசிகர் ஒருவர், தமிழ் சினிமாவில் உங்களை கவர்ந்த நடிகர் யார்...? என கேட்டார். இந்த கேள்விக்கு சில நிமிடம் யோசித்த பின்பு ‘அஜித்’ என தெரிவித்தார் ஸ்ரீரெட்டி. தற்போது இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதுவரை பல நடிகர்கள் பற்றி, தவறான தகவல்களையே கூறி வரும் ஸ்ரீரெட்டி முதல் முறையாக தனக்கு பிடித்த தமிழ் நடிகர் என அஜித்தை கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.