Asianet News TamilAsianet News Tamil

மரணிக்கும் முன் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதேவி... காரணம் என்ன?

actress Sridevi was depressed
actress Sridevi was depressed
Author
First Published Feb 28, 2018, 4:01 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். ஸ்ரீதேவியின் இந்த மரணச் செய்தியைக் கேட்டு இந்தியத் திரையுலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்பட நடிகையாக தன் நடிப்பால் முத்திரை பதித்து வெற்றி வாகைசூடியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் திரைப் பயணத்தைத் தொடர்ந்த ஸ்ரீதேவி, இந்திப் பட ரசிகர்களால் கனவுக்கன்னியாக, சூப்பர் ஸ்டாராக ஆராதிக்கப்பட்டார்.

actress Sridevi was depressed

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய் என மூன்று தலைமுறை நாயகர்களுடன்  கிட்டத்தட்ட கடந்த ஐம்பது ஆண்டு காலமாய் இந்தியாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்த ஒரு நடிகை உண்டென்றால் அவர் ஒரே ஒருவர்தான். தமிழகத்திலிருந்து இந்தித் திரையுலகில் ஹேமமாலினி, ரேகா, வைஜயந்திமாலா ஆகியோர் முன்னணி நடிகைகளாகப்பயணப்பட்டிருந்தாலும் ஸ்ரீதேவி அளவுக்கு இந்தியில் பிற தமிழ் நடிகைகள் உச்சத்தைத் தொட்டதில்லை. ஆனால் நடிகை ஸ்ரீதேவி தமிழைப்போல,  இந்தியிலும் நடித்து வெற்றிவாகை சூடினார். முதல் வெற்றி 1983 ஜித்தேந்திராவுடன் நடித்த 'ஹிம்மத்வாலா'வில் நிகழ்ந்தது. வெற்றியென்றால் அப்படி ஒரு வெற்றி. இதனையடுத்து ராஜேஷ்கண்ணா, ஜித்தேந்திரா, அமிதாப் பச்சன், தர்மேந்திரா& சன்னி தியோல் (தந்தையும், மகனும்) நாகேந்திரராவ்&நாகார்ஜுனா (தந்தையும் மகனும்) சிரஞ்சீவி, மிதுன் சக்கரவர்த்தி, சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், அனில் கபூர், சஞ்சய்தத் என அவர் இணைந்து நடிக்காத நட்சத்திரங்களே இல்லை எனும் அளவுக்கு அவரது நடிப்பு சாம்ராஜ்யமும் ரசிகர்கள் பட்டாளமும் இந்தியா முவதும் பரந்து விரிந்திருந்தது. நடிப்பிலும், நடனத்திலும், வசன உச்சரிப்பிலும் கூட பாலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார் ஸ்ரீதேவி.

actress Sridevi was depressed

சரி ஸ்ரீதேவி மரணிக்கும் முன்பு எந்த மாதிரியான இன்னல்களை சந்தித்தார்? ஸ்ரீதேவி வாழ்க்கை பலர் நினைப்பது போன்று சந்தோஷமானது இல்லை என அவரது சந்தோஷமான வாழ்க்கைக்கு உள்ளே மறைந்திருந்த சில மறுக்க முடியாத உண்மைகள் வெளியாகியிருக்கிறது.

என்னதான் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எல்லோரும் நினைப்பதைப்போல ஸ்ரீதேவி நிம்மதியாகவே இங்கிலிஷ் விங்கிலிஷ் மகிழ்ச்சியை தவிர ஸ்ரீதேவி மிகவும் கவலையில் இருந்துள்ளார். தனது எதிர்காலம் என்னவாகுமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயம் ஏற்படுத்திவிட்டன. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை. அவர் கேமராவுக்கு முன்பு நடிக்கும்போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்துள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர் அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல குடும்பம், அவருக்கு என்ன குறை என்று பலரும் அவரை பார்த்து பொறாமைப்பட்டார்கள். ஸ்ரீதேவியின் தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடித்து பறந்தார். அதன் பிறகு அவரின் தாயால் கூண்டுக்கிளியாகிவிட்டார். கனவுக் கன்னியாக திகழ்ந்த அந்த சமயத்தில் நடிகர்களுக்கு கறுப்பு பணத்தில் தான் சம்பளம் கொடுத்தார்கள். கறுப்பு பணத்தில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதால் ரெய்டு பயத்தில் ஸ்ரீதேவியின் தந்தை அந்த பணத்தை தனது உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்தார். அவர் இறந்த பிறகு அவர்கள் ஸ்ரீதேவியை ஏமாற்றிவிட்டனர். ஸ்ரீதேவியின் தாய் சில தவறான முதலீடுகள் செய்து நஷ்டம் அடைந்தார். இதனால் ஸ்ரீதேவி கிட்டத்தட்ட பணம் இல்லாமல் இருந்தபோது தான் போனி கபூர் அவர் வாழ்க்கையில் வந்தார். போனியும் அப்போது பெரும் கடனில் இருந்தாலும் ஸ்ரீதேவி அழ தோள் கொடுத்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.

actress Sridevi was depressed

ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றி முதலில் வந்த செய்தியும் பின்னர் அது மறுக்கப்பட்டு அவர் மாரடைப்பில்இறக்கவில்லை, குளியல் தொட்டியில் மூழ்கி மூச்சுத் திணறி மரணமடைந்தார் என்ற செய்தியும் ஊடகங்களில்உச்சத்தைத் தொட்டன. அத்துடன் இல்லாமல் குளியல் அறையில் எப்படி விழுந்திருப்பார் என்னும் யூகங்களை வைத்து, தொலைக்காட்சிகள் தங்கள் வியாபாரத்துக்காக ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை வைத்து தங்களது டி.ஆர்.பியை.ஏற்றிக் கொண்டது.

ஸ்ரீதேவி தொழில்முறை நடிகை. அதில் அவர் தனித்தன்மையுடன் திகழ்ந்தார். கதாநாயகியாக நடிப்பதை ஸ்ரீதேவிநிறுத்திக்கொண்டாலும் சினிமாவால் கிடைத்த புகழை வைத்து விளம்பரப் படங்களில் நடிப்பது, தனியார் விழாக்களில்விருந்தினராகப் பங்கேற்று சம்பாதிப்பது ஆகியவற்றை ஸ்ரீதேவி நிறுத்தவில்லை. தமிழில் விஜய் நாயகனாக நடித்த புலிபடத்தில் ஸ்ரீதேவி நடித்ததற்கு சம்பள பாக்கி இருந்தது. அதை ரிலீஸுக்கு முன் வசூலிப்பதில் கறாராக இருந்தார் தமிழ் திரயுலகிற்க்கே தெரிந்த விஷயம்.

actress Sridevi was depressed

தனக்கு எவ்வளவுதான் கடன் இருந்தாலும், தன் இளமைத் தோற்றம்குன்றாதவண்ணம் அழகுபடுத்திக்கொள்வது, அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவற்றில் ஸ்ரீதேவி ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார். அதேபோல் தன் மூத்த மகள் ஜான்வியை இந்தியில் கதாநாயகியாக்கும் முயற்சியில்வெற்றி பெற்றார்.

actress Sridevi was depressed

ஒருபுறம் இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மகள் ஜான்வியின் ஆண் நண்பர்கள் வட்டத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார்ஸ்ரீதேவி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஜான்விக்குத் தந்தை போன்றவர்.

actress Sridevi was depressed

அவரதுமகனுடன் தன் மகள் நெருக்கமான நட்புடன் இருப்பதை ஸ்ரீதேவியால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பெருத்த அதிர்ச்சியாகவே இருந்தது. (அந்த கால கட்டத்தில் ஸ்ரீதேவி தனிப்பட்ட வாழ்வில் மிதுன் சக்கரவர்த்தியுடன் இணைத்து பேசப்பட்டார். 1985ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை ரகசிய திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி என பத்திரிகைகளில் செய்தியும் வெளியானது. பிறகு 1988 ஆம் ஆண்டு இந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்  ஸ்ரீ தேவி. மிதுனுடனான தனது நட்பை முறித்துக் கொண்டார்) அதுவே அவரை நிரந்தரமன உளைச்சலைத் தந்தது என்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios