நான் பிரதமர் ஆகுவேன் ..! ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி பேச்சால் பரபரப்பு..?

பாலிவுட் நடிகையான ஸ்ரீதேவி சமீபத்தில் உயிரிழந்தார். இவருடைய மகளான ஜான்வி நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், மராத்த படமான சாய்ரத்...மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது என்பதால், இதனை இந்தியில் எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ஜான்வி மற்றும் இஷான் கட்டார் இணைந்து  நடித்து வருகின்றனர்

இந்த படம் குறித் நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜான்வி மற்றும் கடாக் இவர்கள் இருவரிடம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சில கேள்விகளை கேட்டார். அப்போது, உங்கள் இருவரில் யார் பிரதமர் ஆக முடியும் என கேட்டார்.

இதற்கு சற்றும் யோசிக்காமல் உடனே பதில் அளித்த ஜான்வி, நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன என பதில் அளித்தார்...இதனை தொடர்ந்து சற்று சலசலப்பு நிலவியது.

பின்னர் உடனே, அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..உடனே   இதை யாரும் பத்திரிக்கையில் போட்டு விடாதீர்கள் என கூறினார்.. இவருடைய நகைச்சுவையான பேச்சை கேட்டு அரங்கமே சற்று நேரம் சிரிப்பாக இருந்துள்ளது.

நடிகை ஸ்ரீ தேவி, தன் மகளின் முதல் படம் வெளியாக போகிறதே என்ற ஆவலில் இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தன் மகள் நடித்து வெளிவர உள்ள படத்தை கூட பார்க்க முடியாமல், இந்த உலகை  விட்டு மறைந்த சம்பவம் அனைவரையும் ஒரு விதமான துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது