ஆந்திர கடலில் தோன்றிய எத்தனையோ புயல்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அப்படியே தமிழகத்தினுள் நுழைந்து, லேசான அதிர்வை கூட தராமல் கரைந்து காணாமல் போயிருக்கிறது. ஆனால் தெலுங்கு பட உலகமான டோலிவுட்டிலிருந்து, கோலிவுட்டான தமிழகத்தினுள் நுழைந்திருக்கும் ஸ்ரீரெட்டி எனும் புயல் பல மாதங்களாகியும் வலுவே இழக்காமல் வளைச்சு வளைச்சு வீசிக் கொண்டிருக்கிறது.

 ஆந்திர பட உலகில் ராணாவில் துவங்கி பல முக்கிய தலைகளை தெறிக்க வைத்தவர் ஸ்ரீரெட்டி. சமீபத்தில் கூட சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோரை ‘எனது உள்ளாடைகளை துவைத்துப்போடுங்கள். அப்போதுதான் எனது மேன்மை உங்களுக்குப் புரியும்.’ என்று ஃபேஸ்புக்கில் பேய்த்தனமாக ஒரு கருத்தை தெரிவித்து பஞ்சாயத்தை கிளப்பியவர். 

தமிழ் திரையுலகிலும் விஷால், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்  சி உள்ளிட்ட சிலர் இவரது பஞ்சாயத்துகளால் பாதிக்கப்பட்டனர். ‘பாட்டாளி’ படத்தில் பெண் வேடமிட்டு வரும் ‘வடிவு’ எனும் வடிவேலு மாதிரி ‘அய்யோ என் கற்பு, என் கற்பு’ என்று அடிக்கடி ஸீன் போட்டு போராட்டம், ஆர்பாட்டம், புகார் கொடுப்பு என்று அலப்பரையை கூட்டுவது ஸ்ரீரெட்டியின் வேலை.


 
அதேவேளையில் பார்த்திபன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து, செல்ஃபி எடுத்து தனது முக்கியத்துவத்தையும் நிரூபிப்பார். அதையெல்லாம் தாண்டி ‘எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது!’ என்று சொல்லி, தமிழக அரசியல் அரங்கையும் அதிர வைத்திருப்பவர். 

இப்பேர்ப்பட்ட ஸ்ரீரெட்டி இப்போது தமிழக மீடியா மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள், கேமெரா மென் பக்கம் பாசத்தோடு திரும்பியிருக்கிறார். தனது போராட்டங்கள், குறைகள், குரல் ஆகியவற்றை பொது மக்களிடமும், உரியவர்களிடமும் எடுத்துச் சென்று, தனக்கு சப்போர்ட் செய்யும் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வரும் சனிக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் 9 மணி வரை சென்னை திநகரில் மதுபான பார்ட்டி வைத்து அவர்களை அழைத்துள்ளாராம். மேலும் இந்த பார்ட்டிக்கு கேமெராக்களை கொண்டு வர வேண்டாம்! ஏனென்றால் இது பர்ஷனல் பார்ட்டி! என்றும் உஷாராக குறிப்பிட்டுள்ளாராம். 
தெளிவுதான் பொண்ணு.
மச்சி சூடா ஒரு பீர் சொல்லு!