ரஜினி, கமல் போன்ற முன்னனி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீ பிரியா, பல நாட்களாக திரையுலகத்தை விட்டு ஒதிங்கி சின்னத்திரை மற்றும் இயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்திய இவர் சமீபகாலமாக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இதே போல் தனியார் தொலைக்காட்சி ஒன்று பொது மக்களை ஏமாற்றி, உதவி செய்வதாக கூறி அவர்களை அசிங்கப்படுத்தி வருகிறது என கடந்த சில மாதங்களாகவே அதன் தொகுப்பாளர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அதே போல ஒரு நிகழ்ச்சி நடத்தி வரும் குஷ்பூ என இருவரையும் தாக்கி ட்வீட் செய்து வருகிறார்.

தற்போது அனைவரும் போராடி வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீ பிரியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே  ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது கருத்தை  வெளியிட்ட இவர் தற்போது மீண்டும் தன் கருத்தை உணர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழா எழுந்துகொள்! ஜல்லிக்கட்டை நடத்து, ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலியுடன் வாருங்கள் காளைகளே என கவி நயத்துடன் கூறியுள்ளார். இது மேலும் ஜல்லிக்கட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.