. கடந்த ஓரிரு தினத்திற்கு முன் குடும்ப நண்பர் திருமண விழாவில் மகாராணி போல் உடையநிந்துக் கொண்டு வளம் வந்த இவர் தற்போது இந்த உலகை விட்டு சென்று விட்டார், அவரை இனி காண முடியாது என்கிற உண்மைய மனது ஏற்க மறுப்பதாக பலர் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த அயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த மீனம்பட்டியில் பிறந்த இவர், 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர்.

தன்னுடைய சினிமா பயணம் மூலம் உண்மையாக உழைத்து உயர்ந்த இவரின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது இவர் சுயமாக சம்பாதித்து வாங்கியவை. கணவர் போனி கபூருக்கு இதைவிட பல மடங்கு சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Lux மற்றும் Tanishq குழுமத்தின் விளம்பர தூதுவராக இருந்துள்ளார் இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய தொகை வருமானமாக வருகிறது. 

மும்பையில் உள்ள அவரது பங்களா மட்டும் $35 மில்லியன் மதிபுடையதாம். கார்களில் Porshe Cayenne அவரது விரும்பமான ஒன்றாம்.

ஸ்ரீதேவியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 13 கோடி, அதோடு ஒரு படத்துக்கு ஸ்ரீதேவி 3.4 முதல் 4.5 கோடி வரை சம்பயம் வாங்குகிறாராம்.

English Vinglish படத்திற்கு பிறகு அவருடைய சம்பளம் சற்று உயர்ந்தது.

அவர் வைத்திருக்கும் விலைமதிப்புள்ள 7 கார்கள் மொத்தமாக 9 கோடி வருமாம். பாலிவுட் சினிமா நடிகைகளில் ரூ. 2 கோடி மதிப்புள்ள Bentley கார் வாங்கிய முதல் நடிகை இவர்தான்.

இவருடைய 3 பங்களா மட்டும் ரூ. 62 கோடி விலை மதிப்புள்ளதாம்.