'காதலர் தினம்' திரைப்படதின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே, இந்த படத்தை தொடர்ந்து 'கண்ணோடு காண்பதெல்லாம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.

தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த போதே, 2௦௦2 ஆம் ஆண்டு கோல்டி பெல் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் இவர், உடல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, இவருக்கு புற்று நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சோனாலி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் இந்த செய்தியை தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார். மேலும் இவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலர் இவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தற்போது சோனாலி, அமெரிக்காவில் கேன்சர் நோய்க்காக கீமோ தேரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக இவருடைய முடிகளை வெட்டும் காட்சியை படம்பிடித்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சி பலரையும் கண் கலங்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள். எனினும் இவர் இதில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என்கிற நம்பிக்கையோடு சிரித்தமுகத்தோடு உள்ளார்.

அந்த காட்சி: