actress shruthi met continious flop in bollywood

நடிகை ஸ்ருதிஹாசன், ஒரே நேரத்தில் விஜயுடன் புலி படத்திலும் அஜித்துடன் வேதாளம் படத்திலும் நடித்து பல நடிகைகளை பொறாமை பட வாய்த்த நடிகை.

இவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில், பாலிவுட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையோடு பல இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் தமிழில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ள வரலாற்று திரைப்படமான சங்கமித்ராவில் ஒப்பந்தம் ஆகி, ஒரு சில காரணத்தால் இந்த படத்தை விட்டும் தற்போது விலகி விட்டார்.

இந்நிலையில் இவர் பெரிதும் எதிர்பார்த்திருந்த பாலிவுட் திரைப்படம் பெஹன் ஹொகி தெரி திரைப்படமும் இவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற்று கிரகத்தில் இருந்து ஒரு நடிகை நடித்தது போல் உள்ளது என்றும். இதனை படங்களில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு சரியாக கதை கூட தேர்வு செய்ய தெரியாத என்பது போல் ஒரு ஆங்கில பத்திரிகை விமர்சித்துள்ளது.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன் நடித்த அனைத்து பாலிவுட் திரைப்படங்களும், தோல்வியை தழுவிய நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்த்த இந்த படமும் ஏமாற்றியுள்ளதால் தோல்வியில் சுருதி சுருண்டு விட்டார் என கூறப்படுகிறது.