தன்னுடன் ஒரே ஒரு இரவு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்ட தயாரிப்பாளருக்கு ஒரு நடிகை செருப்படி பதில் தந்த பழைய சம்பவம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தன்னுடன் ஒரே ஒரு இரவு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்ட தயாரிப்பாளருக்கு ஒரு நடிகை செருப்படி பதில் தந்த பழைய சம்பவம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதி மராத்தே. அவர் தமிழில் ‘இந்திர விழா’, ’நான் அவனில்லை 2’, ’குரு சிஷ்யன், ’அரவான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஸ்ருதிக்கு இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. இதனை முன்னிட்டு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அழைப்பின் பெயரில் இந்தி படத்தில் நடிப்பது குறித்து பேசுவதற்கு ஸ்ருதி அங்கு சென்றுள்ளார். துவக்கத்தில் படம் குறித்தும் படத்தின் கதை குறித்து படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தயாரிப்பாளர் தன்னிடம் பேசியதால்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஸ்ருதி கூறியுள்ளார்.

ஆனால் திடீரென தயாரிப்பாளரின் பேச்சுநடை மாறியதாகவும் ஒரே ஒரு நாள் இரவு என்னுடன் ’தங்க’ வேண்டும் என்ற தயாரிப்பாளர் கூறியதாகவும் ஸ்ருதி தெரிவித்தார். ”தயாரிப்பாளர் பேசியதை கேட்டும் கேட்காதது போன்று இருக்க முடியாது. அதனால், நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், ஹீரோ யாருடன் படுப்பார் என்று கேட்டேன். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். இது குறித்து நான் புகார் தெரிவித்த பிறகு அந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்” என்று தான் தரமான சம்பவம் செய்ததை என்ன காரணத்துக்காகவோ தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதி.

”அன்று நான் காட்டிய துணிச்சல் என்பது எனக்காக மட்டும் அல்ல. அனைத்து பெண்களுக்காகவும் மனதில் வைத்தே அப்படி துணிந்து செயல்பட்டேன். என் வெற்றி என்பது நான் ஒரு தயாரிப்பாளரிடம் அட்ஜஸ்ட் செய்து போவதில் இல்லை என்று அன்றே நான் நம்பியதும் நான் அவ்வாறு நடந்துகொள்ளக் காரணம்” என்கிறார் ஸ்ருதி.