actress shruthi adujusting issue felt tamil producer

நடிகர் அர்ஜுன், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா மற்றும் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடித்து வெளியான திரைப்படம் நிபுணன். இந்த படத்தில் நடித்த நடிகர் ஸ்ருதியிடம் சமீபத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல தாயரிப்பாளர் ஒருவர். ஸ்ருதி கன்னடத்தில் நடித்து ஹிட் ஆன படத்தை தமிழில் தாயரிக்க உள்ளதாகவும். மேலும் தன்னுடன் இணைந்து 4 பேர் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த படத்தில் இவரை வைத்து இயக்க வேண்டும் என்றால் சக தயாரிப்பாளர்களுடன் ஸ்ருதி அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என கூறியுள்ளார்.

உடனே நடிகை ஸ்ருதி எதை பற்றியும் யோசிக்காமல் காலில் இருந்த செருப்பைக் கழட்டி அடிப்பேன் என்று எச்சரித்தாராம். இதனை தற்போது வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதி, இந்த நிகழ்விற்கு பிறகு அந்த தயாரிப்பாளர் என் பக்கமே திரும்பவில்லை என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

இப்படி மிகவும் தைரியமாக நடிகையின் வாயில் சிக்கிய அந்தத்தயாரிப்பாளர் யார் என பலரும் கோடம்பாக்கத்தில் மூளையை பிழிந்து யோசித்து வருகின்றனராம். அதில் தற்போது அடிபட்டுள்ளது குறைந்த பட்ஜெட்டில் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த மூன்றெழுத்து பெயர் கொண்டவர்தான் என சிலர் கிசுகிசுகின்றனர்.