'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 

முதிர்ச்சி:

தற்போது இவர் 35வயதை தொட்டு விட்டதாலும் இவருக்கு முகத்தில் முதிர்ச்சி தெரிய துவங்கி விட்டாதாலும்  திரைப்படங்களில் வாய்புக்கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பளர்களும் தயங்கியதாக தகவல் வெளியானது.

சிம்புவுடன் ஸ்ரேயா:

கடந்த வருடம் இவர் நடிகர் சிம்பு நடித்து வெளியான AAA திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றிப்பெற்றால் மீண்டும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த இவருடைய கனவு பொய்யானது. AAA திரைப்படம் மிக பெரிய தோல்வியை அடைந்தது மட்டும் இன்றி சிம்புவுக்கு மிக பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

கவர்ச்சி:

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரேயா படவாய்ப்புகளுக்கு கொக்கி போடுவதாக கூறப்பட்டது.

திருமணம்:

ஸ்ரேயாவுக்கு தற்போது படங்களில் நடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லாததால் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகும் முடிவுக்கு வந்துவிட்டார்.

இவரை திருமணம் செய்துக்கொள்ள போவது பிரபல ரஷ்ய கூடைப்பந்து விளையாட்டு வீரர்  Andrei Koscheev என்பவர் தான். இவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் உதயபூரில் நடைப்பெற உள்ளதாக கூறப்படுகிறது.