பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகர் நடிகைகளின் உண்மை குணத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் டைட்டில் வின்னர் என்றால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் , அந்த பிரபலம் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும். அந்த வகையில் பிக்பாஸ் இந்தி சீசன் 11 டைட்டில் வின்னரும் பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ஷில்பா ஷிண்டே தற்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளிலும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

சமீபத்தில் பாலிவுட் நடிகை இஷா கோபிகர், பாஜக கட்சியில் இணைத்தார். அதே போல் நேற்று மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்,  நிகழ்ச்சியில் அக்கட்சியின் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்த பின்னர் நடிகை ஷில்பா ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டை ஆட்சி செய்துள்ளது. இதனால் இந்த கட்சியில் சேர முடிவு செய்தேன். தற்போது நமக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொண்டு வர முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

மேலும் நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் காங்கிரஸ் கட்சி ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்று ஷில்பா கூறியுள்ளார்.