அந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் தற்போது மீண்டு வந்துள்ள ஷெரின், டிக்-டாக்கில் செம்ம பிசியாக வலம் வர ஆரம்பித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.

 நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். வாவ்...! சொல்ல வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது. 

இஇடையில் தர்ஷன் - சனம் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என்று, தர்ஷனுக்காக தான் ஷெரின் தனது குண்டான உடல் தோற்றத்தை சிக்கென்ற லுக்கிற்கு மாற்றினார் என்றும் நெட்டிசன்கள் வசைபாடி வந்தனர். அந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் தற்போது மீண்டு வந்துள்ள ஷெரின், டிக்-டாக்கில் செம்ம பிசியாக வலம் வர ஆரம்பித்தார். கூடவே விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி இளசுகளை ஏங்க வைக்கிறார். தற்போது புளூ கலர் சுடிதாரில் துள்ளுவதோ இளமை ஷெரின் அளவுக்கு கெத்து காட்டியுள்ளார். வச்ச கண் வாங்காமல் திரும்ப, திரும்ப பார்க்க வைக்கும் ஷெரினின் அந்த சூப்பர் கிளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது. இதோ...

View post on Instagram