கதாநாயகிகளின் தோழியாகத் தொடர்ந்து நடித்து வந்தாலும் தனது தொடர்ந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்களால் வலைதளங்களில் அடிக்கடி வைரலாகிவரும் ஷாலு சம்மு லேட்டஸ்டாக தனது குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாலிப வயோதிக அன்பர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியிருக்கிறார்.

கதாநாயகிகளின் தோழியாகத் தொடர்ந்து நடித்து வந்தாலும் தனது தொடர்ந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்களால் வலைதளங்களில் அடிக்கடி வைரலாகிவரும் ஷாலு சம்மு லேட்டஸ்டாக தனது குளியல் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாலிப வயோதிக அன்பர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்த ஷாலு சம்முவும் சற்று கும்மென்று இருந்ததால் நல்ல ரீச்சை அடைந்தார். நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். 

 இந்த இரு படத்திலும் கிராமத்து குயிலாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. பின்னர் தனக்கு தவறான மெஸேஜ் அனுப்புபவர்களை பகிரங்கப்படுத்தி பிரபலமானார். அப்போது முதல் இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வைரல் வீடியோ...

View post on Instagram