கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு அறிவித்துள்ளதால்  மார்ச் 25ம் தேதி முதல் சினிமாத்துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. மக்களின் முக்கிய பொழுபோக்கு அம்சமான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் ஓடிடி தளங்களில் அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்துள்ளனர். ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி எனப்படும் ஆன்லைன் தளங்கள் மூலமாக படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு என்று முடியும் என தெரியாததால் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல், ஆர்யா நடித்த டெடி போன்ற படங்களும் ஓடிடி டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது கவர்ச்சி கன்னி ஷகிலாவின் படமும் இணைந்துள்ளது. 

இதையும் படிங்க: யூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....!

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன் லால் பட வசூலையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு ஒரு காலத்து கெத்து காட்டியவர் கவர்ச்சி கன்னி ஷகிலா. ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா, அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். குணச்சித்திரம்  மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. 

iஇதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ஷகீலா நாட் பார்ன் ஸ்டார் என்ற பெயரில் படம் உருவாக உள்ளது. இதில் பாலிவுட் நடிகையான ரிச்ச சதா, தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகரான பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.