கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அனைவரும் வெளியில் வரவேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

பலர் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல் சிலர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

எந்நேரமும் துறுதுறுவென காணப்பட்ட பலருக்கும், வீட்டில் முடங்கி உள்ளது சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எப்படி பொழுதை கழிப்பது என புலம்பி வருபவர்களும் ஒரு பக்கம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று  7 மணிக்கு ரசிகர்களுடன் சாட் செய்ய உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாயீஷா, சூர்யாவுடன் காப்பான், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவுடன் கஜினிகாந்த், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 இவருடைய நடிப்பில் விரைவில் 'டெடி'  திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமந்தாவிற்கு பிறகு திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் சாய்ஷாவும் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.