'வனமகன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை சாயிஷா. முதல் படமே வித்தியாசமான கதைக்களம்மாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்ததால் தற்போது இவருடைய காட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. அம்மணி தொடர்ந்து அடுக்கடுக்காக பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கமிட் ஆகி, வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

சொந்த ஊர் மும்பை என்பதால் நடிகர்களுடன் மிகவும் சகஜமாக பழகி விடுகிறார். மேலும் தமிழ் பட வாய்ப்புகள் அதிகமாக இவரை தேடி வருவதால் தமிழ் கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இதுவரை நடிகைகளின் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்ளதாக நடிகர் பிரபுதேவா கலந்து கொண்டு, சயிஷாவுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.

இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மூத்த நடிகர் ஒருவர் மீண்டும் ஒரு புது சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார் சாயிஷாவை.  

சயிஷா கொண்டாடிய பிறந்த நாள் பார்டியில் கலந்து கொண்ட இவர், நடிகைகள் மது விருந்து கொடுப்பது சாதரணமான விஷயம் தான். ஆனால், திருமணம் ஆகாத ஒரு நடிகை மது விருந்து கொடுப்பது இதுவே முதல் முறை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

இதனால் இவருக்கு நெருக்கமானவர்கள் சிலர்... 'மும்பையில் இதெல்லாம் சகஜம் என்றாலும்' கோலிவுட்டில் இப்படியெல்லாம் நடந்து கொள்ளதீங்க, என அட்வைஸ் செய்து வருகிறார்களாம். .