தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மாஸ் என்டர்டயன்மெண்ட் திரைப்படம் மாரி 2 . இந்த படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார்.  சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், வினோத், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.  குறிப்பாக இப்படத்தில், சாய்பல்லவி மற்றும் தனுஷ் இணைந்து நடனமாடிய 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த பாடலுக்கு நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.  மேலும் இப்பாடல் சமூக வளைதளத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. 

இந்நிலையில் தற்போது நடன இயக்குனர் ஸ்ரீதருடன் ரவுடிபேபி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.