இயக்குனர் கே.பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சரிதா. மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடல் கட்டுடன், திராவிட முகம் கொண்ட இவருடைய நடிப்பும் அழகும் 80பதுகளில் பல ரசிகர்களை கவர்ந்தது. 

இவர் நடிப்பில் வெளிவந்த 'தப்புத் தாளங்கள்', 'தண்ணீர் தண்ணீர்', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். 

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய இவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கிய சிலோன் என்கிற படத்தில் இலங்கை அகதியாக நடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

தன்னுடைய மகன்களுடன் துபாயில் செட்டில் ஆகிவிட்ட சரிதா அங்கேயே தற்போது வாழ்ந்து வருகிறார். அடிக்கடி சென்னைக்கு வந்து தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய தங்கை விஜி சந்திரசேகரை சந்தித்து செல்வார்.

தற்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல கன்னட இயக்குனர் சந்திரகலா இயக்கம் 'சில்லும்' என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டும் என இயக்குனர் இவருக்கு போன் மூலமே கதையை சொல்லி ஒகே வாங்கி இருக்கிறார். இந்தப்படத்தில் மனோரஞ்சன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராகவேந்திர ராஜ்குமாரும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த படம் வரம் ஜூன் மாதம்  துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.