‘வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் ’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள தனது அம்மாவுக்கு ட்விட்டர் பக்கத்தில் மிக காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை சங்கீதா.

தாயின் புகார் குறித்து நேற்று கருத்து கேட்டபோது ‘‘சினிமா தொடர்பான வி‌ஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட வி‌ஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்ற சங்கீதா இன்று பொங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

...டியரஸ்ட் அம்மா என்னை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. என்னை 13 வது வயதிலேயே பள்ளியிலிருந்து நிறுத்தி  சினிமா தொழிலுக்கு அனுப்பியதற்கு நன்றி. நான் சம்பாதித்த பணத்தில் உன் மகன்கள் போதை மருந்துகள், மது அருந்த ப்ளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக்கொண்டதற்கு நன்றி.

குறிப்பிட்ட வயதில் எனக்குத் திருமணம் செய்து வைக்காமல் உங்கள் சவுகர்யத்திற்காக என்னை மாடாய் உழைக்கவைத்து எனது சம்பாத்தியத்தை உறிஞ்சினீர்களே அதற்கு நன்றி. பிழைக்கத் தெரியாத ஒரு அப்பாவி மகளை போராட்டக் குணமுள்ள பெண்ணாக மாற்றினீர்களே அதற்கு நன்றி. என்னையும் என் கணவரையும் நிம்மதியாக வாழவிடாமல் தொடர்ந்து அவதூறு செய்கிறீர்களே அதற்கு நன்றி.இவற்றுக்காகவாவது உங்களை நாங்கள் எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்போம். என்றாவது ஒரு நாள் உண்மையை உணர்ந்து உங்கள் ஈகோவை விட்டு வெளியே வந்து என் பெருமையை அறியத்தான் போகிறீர்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார் சங்கீதா.