ஒரு நடிகை திருமணம் செய்த மூன்றாவது மாதத்தில் துவங்கி அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்துக்குள் ‘அவர் கர்ப்பமாக இருக்கிறார்’என்ற வாந்தி  வதந்திகள் சுமார் பத்து முறையாவது எழுதப்படுகின்றன என்கிற அடிப்படையில் மீண்டும் நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன.

சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர்.இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் ஏற்கனவே சில முறை வெளிவந்த நிலையில் தற்போது ட்விட்டரில் தனது பெயரை, ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.


சமந்தாவின் அடுத்தப் படமான ‘ஓ பேபி’ படத்தின் டீசரை ஷேர் செய்த, அவரது கணவர் நாக சைத்தன்யா ‘பேபி’ என்றே சமந்தாவை குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையே ட்விட்டர் ஹேண்டிலை ‘பேபி அக்கினேனி’ என சமந்தா மாற்றியதும், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி ‘ஸெட்’ வேகத்தில் டோலிவுட்டில் பரவக்காரணமாகியது.

இருப்பினும் ‘ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் சமந்தா இப்படி செய்திருக்கிறார் என்று அவரது வட்டாரங்கள் அடித்துக்கூருகின்றன,இயக்குநர் பி.வி நந்தினி ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது.தவிர, ’மன்மதடு 2, 96 படத்தின் தெலுங்கு ரீமேக்’ ஆகியப் படங்கள் சமந்தா கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.