பிரபல நடிகரும், தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜுனா, வருகிற லோக்சபா தேர்தலில்  போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகரும், தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜுனா, வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாகார்ஜுனா, அதிக அளவு அரசியலில் ஈடுபாடு காட்டாமல் தற்போது தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். 

எனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, இவர் எம்பி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஒய்எஸ்ஆர். இறந்துவிட்டதால் தேர்தலில் போட்டியிடுவதை தள்ளிவைத்தார் நாகார்ஜுனா.

இந்நிலையில், தற்போது நாகார்ஜுனாவுக்கு ஓஎஸ்ஆரின். தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி வரப்போகும், பார்லிமென்ட் லோக் சபா தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்திருப்பதாகவும், ஆனால் நாகார்ஜுனாவின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை தெரிவிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் நாகார்ஜுனா ஏற்கனவே எம்.பி.தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியதால், தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின், அழைப்பை ஏற்றுக் கொள்வார் என பரவலாக ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. 

அதே போல், நாகர்ஜுனா... ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில், போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.