கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்கோவின் காவிரி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.  இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'ஏ மாயா சீசாவை' என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார்.  பின் 'விண்ணை தாண்டி வருவாயா', 'பானா காத்தாடி'  போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு மற்றும் தமிழில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வரும் சமந்தா,  திருமணத்திற்குப் பின்பும் தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.  மேலும்,  சமீப காலமாக பெரிய நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிப்பதை விட, சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவர் நடித்த 'யூ டர்ன்' , 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஓ பேபி' திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

தற்போது இவரின் கைவசம் தமிழில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியான '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக் மட்டுமே உள்ளது. அதாவது இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தற்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும்,  அதனால் '96 ' படத்தின் பின் படப்பிடிப்பை முடித்த பின் சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தன்னைத் தேடி வரும் இயக்குனர்களிடம், தற்போது எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என அதிரடியாக கூறி வருகிறாராம் சமந்தா.  மேலும் '96 ' ரீமேக் படத்தில் முடிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார். சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2011 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.