தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்பும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி போட்டு வருபவர் நடிகை சமந்தா. இவர் இன்று சென்னை அருகே செங்குன்றத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார். 

சமந்தாவின் வருகையை அறிந்த ரசிகர்கள் 1000 திறக்கும் மேற்பட்டோர் கூடியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. 

நீண்ட நாள்களுக்கு பின்:

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட பின் முதல் முறையாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் நடைபெற்ற கடைதிறப்பு விழாவில் கலந்துக்கொண்டதால் இவருடைய ரசிகர்கள் அங்கு பலர் கூடினர். 

எந்த வித முன் அறிவிப்பும் இன்றி இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டதால்... எந்த வித போலிஸ் பாதுகாப்பும் போடப் படாமல் இருந்தது. ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

ரசிகர்களுக்கு நன்றி:

பின் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த சமந்தா அனைவரையும் சந்தித்து நன்றி கூறினார். மேலும் இவர் அந்த இடத்தில் இருந்து கிளம்பும் போது ரசிகர்கள் பலர் இவரை தங்களுடைய செல் போனின் படம் பிடித்தனர். 

சமந்தா வருகையால் ஏற்பட்ட திடீர் கூட்டத்தால் அந்த சாலையில் பல மணிநேரம் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.