பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சமீபத்தில் வெளியேறிய நடிகையும், மாடலுமான சாக்ஷி, உள்ளே இருந்த போது கவினை காதலித்து வந்தார். ஆரம்பத்தில் கவினும் சாக்ஷியை காதலிப்பது போல், அவர் பின்னாடியே சுற்றி விட்டு பின், லாஸ்லியாவிடம் பேச துவங்கியதும் சாக்ஷியை விட்டு மெல்ல மெல்ல விலக தொடங்கி விட்டார்.

பிக்பாஸ் வீட்டை வெளியேறிய போதும், கூட கவினின் நினைவில் இருந்து அவரால் முழுமையாக விடுபட முடியவில்லை. கவினும் உள்ளே இருந்த போட்டியாளர்களிடம், சாக்ஷிதான் தன்னிடம் முதலில் ப்ரோபோஸ் செய்தார் என கூறினார்.

இதனால் கடுப்பான சாக்ஷி, யார் முதலில் அவரிடம் காதலை கூறியது, என மிகவும் கோவமாக பேசி ட்விட் ஒன்றை போட்டுள்ளார். மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், கவினை பற்றி கண்ட மேனிக்கு பேசினார்.

இந்நிலையில், 'தல' அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தன் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித் என்றும், எந்த ஒரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்தக்கூடியவர் என்றும் சாக்ஷி மிகவும் எமோஷ்னலாக  ட்வீட் செய்துள்ளார். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.