கடந்த 2010 ஆம் ஆண்டு, 'லீடர்' என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய, பின் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்திற்காக  இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான எடிசன் விருது, விஜய் அவார்ட்ஸ், உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்தில் நடித்தார். பின் ஒரு சில காரணங்களால் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. ஆனால் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் இவர் தெலுங்கில், நீண்ட இடைவேளைக்கு பின் 'போலீஸ் டைகர்'  என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய, கடந்த இரண்டு வருடமாக ஜோ லிக்கல்லோ என்கிற வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.