நடிகர் சத்யராஜ் நடிப்பில், 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் 'கடலோர கவிதைகள்'. இந்த படத்தில் ஜெனிஃபர் டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.  

இந்த படத்தை தொடர்ந்து, 'புன்னகை மன்னன்',  'நம்ம ஊரு நல்ல ஊரு',  'சொல்வதெல்லாம் உண்மை' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து, 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

திருமணத்திற்கு பின் 'ரோஜா கூட்டம்' படத்தில், நடிகை பூமிகாவிற்கு அம்மாவாக, அதிரடி போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து, பல படங்களில் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடிகர் யோகிபாபு, கதையின் நாயகனாக நடித்திருந்த 'தர்மபிரபு' படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது நடிகை ரேகாவிற்கு அவருடைய தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம். இவர் நடிக்க வந்தது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால், ரேகா பல படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய தந்தை இவர் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் பார்த்துள்ளாராம்.

அப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள நடிகை ரேகா, தன்னுடைய தந்தை இறந்த பின், அவருக்காக சென்னை கீழ்பாக்கத்தில் ஒரு கல்லறையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தான் இறந்த பின் அதே கல்லறையில் தான் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும் என தன்னுடைய குடும்பத்தினரிடம் தன்னுடைய ஆசையை கூறி உள்ளாராம்.

 

நடிகை ரேகா தான் வாழும் போதே, தன்னுடைய தந்தை கல்லறையில் தான் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும் என, கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல் இவர் அப்பா மீது வைத்துள்ள அன்பை பார்த்து பலர் தொடந்து தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.