தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனலாம்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்தார்.  இவர் நடிப்பில் விரைவில் 'பார்ட்டி' திரைப்படம் வெளியாக உள்ளது.  சிம்புதேவன் இயக்கும் 'கசட தபர' படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதே போல் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.  இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு பட திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது.  

இந்த ரகசிய நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் எனவே தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு திருமண வாழ்வை ரெஜினா துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ரகசிய நிச்சயதார்த்தம் பற்றி பரவும் தகவலுக்கு இதுவரை ரெஜினாவின் தரப்பிலிருந்து இது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.