Asianet News TamilAsianet News Tamil

ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகை ரெஜினா! என் நண்பர்கள் பலர் இப்படித்தான்! ஓபன் டாக்!

நடிகை ரெஜினா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் நடித்த முதல் தமிழ் படமான 'ரஜினி முருகன்' வெற்றி பெற்றாலும், இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 

Actress Regina who is supporting homosexuality
Author
Chennai, First Published Feb 4, 2019, 5:35 PM IST

நடிகை ரெஜினா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் நடித்த முதல் தமிழ் படமான 'ரஜினி முருகன்' வெற்றி பெற்றாலும், இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress Regina who is supporting homosexuality

இதனால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்ததால், முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனால் சில தமிழ் இயக்குனர்களின் பார்வை இவர் மீது பட, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வந்தார்.

தற்போது தான் நடிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டவும் இவர் தயாராக உள்ளதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. 

Actress Regina who is supporting homosexuality

தமிழ், தெலுங்கு, திரையுலகை தாண்டி ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில்  சமீபத்தில் வெளியான,  Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்கிற ஹிந்தி படத்தில் நடிகை சோனம் கபூருக்கு ஓரின சேர்க்கை தோழியாக ரெஜினா நடித்துள்ளார்.

Actress Regina who is supporting homosexuality

இதுகுறித்து தற்போது ரெஜினா கூறுகியில், இந்தியா முழுவதும் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளித்துவரும் நிலையில் என்னுடைய ஆதரவும் உண்டு.  மேலும், என் நண்பர்களில் பலர் ஓரினசேர்க்கையாளர்கள் உள்ளனர். நாம் அவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தவறு என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios