தெலுங்கில் தொடர்ச்சியாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி இணைந்து நடித்த "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்" போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. சினிமாவில் இருவருக்கும் இடையே ஒர்க்அவுட் ஆகும் கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக கூறிவந்தனர். ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, "ராஷ்மிகாவை சினிமாவில் மட்டுமே காதலிக்கிறேன். எனக்கு வீட்டில் பெண் தேடி வருகிறார்கள்" எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் நாங்க எதிர்பார்த்தது உண்மை தான் போல என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தன்னுடைய பெற்றோருக்காக ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்தார். அந்த வீட்டின் கிரகபிரவேச புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அந்த நிகழ்ச்சியின் போது தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள், விஜய்யின் புதிய வீட்டைக் காண வந்திருந்தனர். அதன்படி விஜய் தேவரகொண்டாவின் புதிய வீட்டிற்கு வந்த ராஷ்மிகா மந்தனா அவரது குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். காதல் வதந்தி பரவி வரும் சமயத்தில் விஜய் வீட்டிற்கு விசிட் அடித்த ராஷ்மிகா, அவரது குடும்பத்தினருடனும் குளோஸ் ஆகிவிட்டது, ரசிகர்களை சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது. ஆடம்பரம் இல்லாமல் அடக்கமான அழகில் விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் ராஷ்மிகா எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

"டியம் காம்ரேட்" படத்தில் ஓவர் ரொமான்ஸ், லிப் லாக் என விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி வெற லெவலுக்கு ஹிட்டானது. இதையடுத்து தான் இருவருக்குமிடையே காதல் தீ பற்றியதாக வதந்திகள் பரவின. தற்போது விஜய் குடும்பத்துடன் ராஷ்மிகா மந்தனா நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர். மேலும் வதந்தியை கொளுந்துவிட்டு எரியவைப்பதற்காக அந்தப் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.