'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார் நடிகை ராஷ்மிக்கா. இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி இருந்தாலும், தமிழிலும் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

மேலும் கீதா கோவிந்தம் படத்தில் இடம் பெற்ற, ஏன்டி.. ஏன்டி... பாடலை இவருக்காகவே பார்ப்பவர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் இவர் விஜய்க்கு ஜோடியாக தற்போது அட்லீ இயக்கும் 'தளபதி 63 ' படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் பின் அது வதந்தி என உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும்,  இவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உள்ளதால் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகர் கார்த்தி தேவ் படத்தை தொடர்ந்து '24 ' பட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரியா வாரியர் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது.  ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.