இயக்குநர் ராஜு முருகனின் "ஜோக்கர்" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக "ஆண் தேவதை" என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் காலை வாரியதால், ரம்யா பாண்டியனுக்கு எதிர்பார்த்த அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளை தன்பக்கம் ஈர்ப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் ரம்யா பாண்டியன். 

அதில் தனது இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழகத்தையும் நிலைகுலைய வைக்க முடியும் என்று நிரூபித்தார் ரம்யா பாண்டியன். அதுவரை பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவரை தொலைக்காட்சிகள் அனைத்தும் வரிசையில் நின்று பேட்டி எடுத்தன. 

பின்னர் யு-டியூப் பேட்டிகள், கல்லூரி நிகழ்ச்சிகள் என பிஸியாக சுற்றி வந்தார். தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை கவர்ந்த ரம்யா பாண்டியனால், தயாரிப்பாளர்களின் மனதை தொட முடியவில்லை. எனவே படவாய்ப்புகள் கிடைக்காததால், கொஞ்ச நாட்களாக சோசியல் மீடியாவில் தலைமறைவாக இருந்தார்.

கொழு, கொழுன்னு கும்முன்னு இருந்த இடுப்பழகி ரம்யா பாண்டியன், திடீரென இளைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ரம்யா பாண்டியனின் பரிதாபமான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு என கவலையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.