தனக்கு அசைவ உணவுகள் மிகவும் பிடிக்கும்  எனவும் அதேபோல அசைவ உணவு சமைப்பது பிடிக்கும் எனவும். தன் இடுப்பு அழகால் அனைவரையும் கிறங்க வைத்த ரம்யா  பாண்டியன் தெரிவித்துள்ளார்.  திரை நடிகைகள் பலர் எனக்கு நல்லா சாப்பிட மட்டும்தான் வரும் ஆனால் சமைக்க வராது என்று சொல்லுவதைக்  கேட்டிருப்போம்.  ஆனால் தமிழ் கதாநாயகியான ரம்யா பாண்டியன் தனக்கு சமைப்பது மிகவும் பிடிக்குமென தெரிவித்துள்ளார்.  முன்னதாக ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் பட்டும் படாமலும் இடம்  பிடித்திருந்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் இடுப்பழகு புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இளைஞர்களையும் கிறங்கடித்த வைத்தார். தனக்கென அதில் பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

 ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்ற லெவலுக்கு அவரின் புகைப்படங்கள்  பிராண்ட் ஆனது. இந்நிலையில் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் குறித்து வாரஇதழுக்கு பேட்டி கொடுத்துள்ள ரமயா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டாள் வீட்டில் சந்தோஷத்திற்கு பஞ்சமே இருக்காது. ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருப்போம்,  ஷாப்பிங்னா புடவை தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ்.  அடுத்தது சல்வார், என்றும்  தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுகிற  குடும்பங்கள் கறி எடுத்து குழம்பு வைப்பாங்க இல்லையா.?  ஆனா நாங்க மாஸ்டர் வைத்து பிரியாணி செய்து சாப்பிடுவோம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல தீபாவளிக்கு சரவெடினா அவ்வளவு இஷ்டம், அதேபோல லட்சுமி வெடி , ஆட்டம் பாம், கையில புடிச்சு கொளுத்தி வீசுவது ரொம்ப பிடிக்கும்.  இப்போ ஹீரோயின் ஆகிட்டதாள கொஞ்சம் பக்குவப்பட்டாச்சு என கூறியுள்ளார். அத்துடன் தனக்கு அசைவ உணவுகள் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி அசைவ உணவுகள் சமைக்கவும் பிடிக்கும். இதுக்காகவே யூட்யூப் பார்த்து புதுசு புதுசா சமைக்க ட்ரை பண்ணுவேன் பொதுவா இதுமாதிரி யூடியூப் பார்த்து சமைச்சா அது சொதப்பல் ஆயிடும்னு கிண்டல் பண்ணுவாங்க ஆனா எனக்கு அப்படி இல்லை,  நான் எது செஞ்சாலும் நல்லாவே செய்வேன்.  ஒருமுறை ஃபெஸ்டிவல் அப்போ முழுக்க முழுக்க என் கைப்பக்குவத்தில் அசைவ உணவுகள் செஞ்சி அசத்தலாம்னு ரொம்ப ஆசை இருக்கு என தெரிவித்துள்ளார்.