முகநூல் ட்விட்டர் வலைதளங்களில் குறிப்பிட்ட நாளில் என்ன டாபிக் ட்ரெண்டிங் ஆகுமென்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அகப்படாத ரகசியம். அந்த வகையில் கடந்த ஒன்றிரண்டு தினங்களாக நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு போஸ் ஒன்று கன்னாபின்னாவென்று வைரலாகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியவாதிகள் அப்படத்தைப் பார்த்து நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் கவிதைகளிலிருந்தும் கமெண்டுகளிலிருந்தும் காணமுடிகிறது.

இலக்கியவாதிகளே ஏங்குகிறார்கள் என்பதால் அவரைப் பற்றிய சிறுகுறிப்பு வரைவதில் ஒன்றும் தவறில்லை. திருநெல்வேலிச் சீமையில் 1993 ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அவதரித்தவர் ரம்யா.பாண்டியன் அப்பா.இன்னும் மணமாகவில்லை. தமிழில் ‘டம்மி டப்பாஸு’என்ற டம்மியான படத்தின் மூலம் 2015ல் அறிமுகமானார். ஆனால் நல்ல அடையாளம் கொடுத்த படம் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’. அந்த அடையாளத்தை அழித்து ஒழித்த பெருமை சமுத்திரக்கனியுடன் அவர் நடித்த ‘ஆண் தேவதை’படத்தையே சேரும். ஏனெனில் அப்படத்தில் ஒரு நெகடிவ்வான ரோல் பண்ணியிருந்தார் ரம்யா. 

அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததால், அடுத்து உருப்படியான படங்கள் வராததால், மெல்ல விரக்தி மோடுக்கு வந்த ரம்யா பாண்டியன் வழக்கமாக நடிகைகள் கையாளும் யுக்தியில் கிளுகிளுப்பான படங்கள் எடுத்து தனது ட்விட்டர், முகநூல் ,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடு ஏற்ற ஆரம்பித்தார். விளைவு....கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இடுப்பு என்ற விஷயம் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இழந்திருந்தது. அதற்கு உயிரளித்திருப்பவர் ரம்யா பாண்டியன்...என்று தொடங்கி வலைதள வட்டாரங்களில் ரம்யா பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்ற பாட்டுதான் டாப்டென்னில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.