கடந்த மாதம் தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும் படி, கவர்ச்சியாக எடுத்து கொண்ட, புகைப்படத்தை வெளியிட்டு திரையுலகையே பரபரப்பாக பேசவைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். 

திருச்சியை சேர்ந்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கல்லூரியில் படித்து கொண்டே, நண்பர்கள் மூலம் கிடைத்த சில குறும்படங்களில் நடித்து வந்தார்.

பின் இவர் நடிப்பு இயக்குனர் ராஜு முருகன் கண்ணில் பட, தான் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில், ரம்யா பாண்டியனை கதாநாயகியாக மாற்றினார். முதல் படமே தேசிய விருது வரை வாங்கியது. ஆனால், இப்படம் வெற்றி பெற்ற போதிலும், ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரு சில படங்களில் மிகவும் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. சிறிய வயதிலேயே... இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக 'ஆண் தேவதை படத்தில் நடித்தார். அனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மீசையும் கூந்தலும், டம்மி தப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இடுப்பை கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதும், பல இயக்குனர்கள் மற்றும், தயாரிப்பாளர்கள் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை ரம்யா பாண்டியனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, திடீர் என ரம்யா தன்னுடைய அழகிய முடிகளை புள்ளிங்கோ ஸ்டைலில் கட் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் இவரின் இந்த புதிய கெட்டப்பை பார்த்து செம்ம ஷாக் ஆகியுள்ளார்.