நடிகை ரம்பா பற்றி சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது  அவர்  கணவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை நாடியது தான், இந்த விவகாரம்  ஒட்டு மொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியது. 

இதன் காரணமாக ரம்பா தற்போது கணவரை பிரிந்து தனியே   தனது  இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஏற்கனவே  குழந்தைகளை தன்னால்  பராமரிக்க சிரமமாக உள்ளது என்றும்  அதனால் அவர்களின் படிப்பு செலவு, பராமரிப்பு செலவுக்கு பணம் கேட்டு கணவருக்கு நீதிமன்ற நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

இந்த பிரச்சனை ஒருபுறம் தீராத நிலையில் தற்போது ரம்பாவின் அண்ணி பல்லவி அவருடைய  கணவர்  வாசு மற்றும் நடிகை ரம்பா  ஆகி இருவரும்  தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது இதில்  மனுவில்  குறிப்பிட்டிருந்த நடிகை ரம்பா மற்றும் அவருடைய அண்ணன் வாசு   இருவரையும் நேரில் ஆஜராக சொல்லியிருந்தது. 

ஆனால்  வாசு மட்டும்  தான் இன்று ஆஜரானார், ரம்பா ஆஜராகாதற்கு அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

ஆனால் அண்ணன் மனைவி   பல்லவி ரம்பா ஹைதராபாத்தில் தான் இருக்கிறார் என கதறியபடி  உண்மை தகவல் கொடுத்ததால் அவரை நேரில் ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது .