இந்தியில் தயாராகும் வெப்சீரிஸ்கள் ஆபாசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக நெட்பிலிக்சில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ்', 'சேக்ரட் கேம்ஸ்' ஆகிய வெப் சீரிஸ்களில் படுக்கை அரை காட்சிகளை அப்பட்டமாக காட்டி இருந்தார்கள்.

இந்நிலையில் 'சேக்ரட் கேம்ஸ்', தொடரில் நவாசுதீம் சித்திக் ஜோடியாக வந்த ராஜஸ்ரீ தேஷ்பாண்டே படுக்கை அரை காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார்.

இதற்கு அவர் மீது பலத்த எதிர்ப்பு வலுத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ராஜஸ்ரீ தேஷ்பாண்டேவை பலர் விமர்சித்து வருகிறார்கள். செக்ஸ் காட்சியிலும், பாலியல் படங்களில் நடிப்பதுபோலவும் நடித்து இருக்கிறீர்களே..? இதில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? பணம் தான் முக்கியமா? பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பீர்களா..? என்றெல்லாம் கடுமையாக ரசிகர்கள் இவரை விமர்சித்து பேசிவருகிறார்கள்.

இதற்கு ராஜஸ்ரீதேஷ்பாண்டே பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். "நான் நிர்வாணமாக நடித்ததை விமர்சிக்கின்றனர். பணம்தான் முக்கியமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கதைக்கு தேவை என்பதால் நிர்வாணமாக நடித்தேன். அந்த கதையை பிரபல நாவலில் இருந்து எடுத்துள்ளனர். அதற்கு அற்புதமான வசனத்தை எழுதி இருந்தனர். அனுராக் காஷ்யப் சிறப்பாக இயக்கி இருக்கிறார். நடிக்க வந்த பிறகு படுக்கை அரை காட்சியில் நடிக்க முடியாது என எப்படி கூற முடியும் என ரசிகர்ளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை".