பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக களம் இறங்கிய ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் ஒன்றாக இணைந்து "பியார், பிரேமா, காதல்" என்ற படத்தில் நடித்தனர். லீவ் இன் லைப் ஸ்டைல் குறித்து எடுக்கப்பட்ட அந்த படம் இளம் தலைமுறையினர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இருவருக்குமிடையே அந்த படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி பற்றி எரிந்த நிலையில், படம் சூப்பர் ஹிட்டடித்திருந்தது. அதன் பின்னர் பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காத நிலையில், மாடலிங் துறையில் பிசியாக களம் இறங்கியுள்ளார். 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவ்வாக இருக்கும் ரைசா, அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே ஹரிஷ் கல்யாணுக்கும், ரைசாவிற்கும் இடையே ஏதோ இருப்பதாக கிசுகிசுக்கள் உலவி வருகின்றன.  இந்த சமயத்தில் டுவிட்டரில் ஹரிஷ் கல்யாண் குறித்து ரைசா நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு அந்த சந்தோகத்தை உறுதிபடுத்தியுள்ளது. 

 

அதில், "தமிழகத்தை மகிழ்விப்பதற்காக ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போகலாம்ன்னு இருக்கேன். உண்மையா நான் இதுக்கு முன்னாடி யார் கூடவும் அந்த மாதிரி போனது இல்லை. அதை எப்படி பண்றதுன்னும் தெரியாது. எப்படி டேட் செய்வது என்றும் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார். 

 

அந்தப் பதிவை பிடித்துப் போன சிலர், ஆலோசனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்ற வார்த்தையை ரைசா பயன்படுத்தியதால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர். 

 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கேவலப்படுத்துவதாகவும், நீங்க டேட்டிங் போறது உங்க சொந்த விஷயம் அதை ஏன் எங்க கிட்ட சொல்றீங்கன்னு, அதனால தமிழ்நாட்டுக்கு என்ன லாபம் அப்படின்னும் ரைசாவை சரமாரிய திட்டி தீர்த்துள்ளனர்.