மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான திருமதி.கீதா ராதா (வயது 86) அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயரார் திருமதி கீதா ராதா (வயது 86) அவர்கள் 21.09.2025 ஞாயிற்றுக் கிழமை இரவு 9.20 மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை 86ல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி சடங்கு 22ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருத்தத்துடன் ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார், ராஜூ ராதா, மோகன் ராதா, ராம்கி, நிரோஷா ராதா” என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாராரின் மறைவு காரணமாக நடிகை ராதிகாவின் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி உள்ள நிலையில், திரைத்துறையினர் பலரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.