ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016  ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, ரேயானுக்கு கடந்த 15 ஆம் தேதி, அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் ரயன் தனது செல்ல மகளுக்கு  ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளதாக ரயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தனது குழந்தையின் பெயர் என்னை பெற்றவர்களிடம் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ள ரேயான், என் மகளும் எனது அம்மா போல அருமையானவளாக வருவாள் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அம்மா மீது அதீத பாசம் கொண்ட ரயன், ராதிகாவின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக தனது குழந்தைக்கு பெயர் வைத்தார். 

இதையும் படிங்க: தாவணி எங்கம்மா... பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தற்போது லாக்டவுனால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், வீட்டிற்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலரோ தங்களது சின்ன வயது புகைப்படங்களுடன் சேர்த்து மலரும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பிளாக்கில் சரக்கு விற்பனை... “திரெளபதி” நடிகர் அதிரடி கைது... கையும் களவுமாக போலீசில் சிக்கிய ஆதாரம் உள்ளே...!

அப்படி ராதிகா மகள் ரயன் ஷேர் செய்துள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. தனது மகள் ரயனுக்கு பிறந்த குட்டி தேவதை ராத்யா மிதுனை பாட்டி ராதிகா சரத்குமார் மடியில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படம் தான் அது. அருகிலேயே தாத்தா சரத்குமாரும் அமர்ந்து கொண்டு, ராதிகா பேத்தியை கொஞ்சும் அழகை பார்த்து ரசிக்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் செம்ம மகிழ்ச்சியில் திழைக்கும் இந்த புகைப்படம் தாறுமாறு வைரலாகி வருகிறது.